ஆசிய விளையாட்டு மகளிருக்கான கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதி வருகின்றன.
எனவே, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, முதலில் துடுப்பாட திர்மானித்தது.
இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய மகளிர் அணி சார்பில் ஸ்மிரிதா மந்தனா 45 பந்துகளை எதிர்கொண்டு 46 ஓட்டங்களையும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 40 பந்துகளை எதிர்நோக்கி 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் உதேசிகா பிரபோதனி, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.