ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே ஏற்பட்ட சக்கிவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 40 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ரிச்டரில் 4.3 மற்றும் 6.3 க்கு இடைப்பட்ட அளவுகளில் தொடர்ச்சியாக 8 முறை நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலநடுக்கத்தினால் 120 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இன்று 2-வது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து இடம்பெற்று வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேநேரம், இதுவரை பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.