NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களை கௌரவிக்கும் உலக இசை தினம் இன்று!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களை கௌரவிக்கும் வகையில், உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

1982ஆம் ஆண்டு பிரான்சில் முதல் உலக இசை தினம் அனுசரிக்கப்பட்டது.

பிரான்சில் மட்டும் கொண்டாடப்பட்ட இந்த தினம், தற்போது 120க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

இசையை விரும்பாதோர் உலகில் இல்லை என்றே கூறலாம். அனைவரது வாழ்க்கையிலும் இசை ஒரு அங்கமாகவே மாறியுள்ளது.

‘ஜாக் லாங்’ என்ற பிரெஞ்சு அரசியல்வாதி உலக இசை தினத்தை பற்றிய யோசனையை முதன்முதலில் முன்வைத்தார். இதை இசையமைப்பாளரான மாரிஸ் ஃப்ளூரெட்டிடம் தெரிவித்தார். அவர் ஒரு பத்திரிகையாளராக இருந்ததினால், அவர் எடுத்த முயற்சியின் காரணமாக முதல் இசை தினம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கொண்டாடப்பட்டது.

இசையின் உணர்வை போற்றும் வகையில் சகல இசை கலைஞர்களுக்கும் உலக இசை தின வாழ்த்துக்கள்.

Share:

Related Articles