NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு உரிய ஆசிரியர்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது, தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால், அதுபற்றி எவ்வித அக்கறையுமின்றி அதே பாடசாலைகளில் பணிபுரிவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சேவையின் நிமித்தம் காரணமாக சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்தத் தீர்மானம் பொருந்தாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு உபரி ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அண்மையில் ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட ஹைலன்ஸ் கல்லூரி மற்றும் குயில்வத்தை தமிழ் வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து உயர்கல்வி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles