NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் – சம்பியன் பட்டம் வென்றவர்கள் விபரம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வரும் நிலையில், இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலீனா ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

இதையடுத்து ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஹோல்கர் ரூனே, டேனியல் மெட்வதேவ் ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் டேனியல் மெட்வெடேவ் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஹோல்கர் ரூனேவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார்.

மேலும், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போடிக்வாண்டே- ரோபின் ஹாஸ் இணை ஹ்யூகோ நிஸ் – ஜான் சிலின்ஸ்கி இணையை எதிர் கொண்டது.

இந்த ஆட்டத்தில் ஹ்யூகோ நிஸ் – ஜான் சிலின்ஸ்கி இணை 7-5, 6-1 என்ற செட் கணக்கில் போடிக்வாண்டே- ரோபின் ஹாஸ் இணையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles