NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இத்தாலியில் கோர விபத்து – 21 பேர் உயிரிழப்பு!

வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெனிசுடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ள மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள புகையிரத பாதைகளுக்கு அருகில் பஸ் சாலையை விட்டு விலகியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles