NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியாவில் இருந்து 92 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!

எதிர்வரும் மூன்று மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நிதிஇ பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார துறையினால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று இந்திய நிறுவனங்களிடம் இருந்து இலங்கை அரசாங்கம் விரைமனு கோரியுள்ளது.

விலை விபரங்களின் அடிப்படையில் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனம் ஊடாக முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முட்டை விலையை ஸ்திரப்படுத்தும் வகையிலும், உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சதொச மற்றும் பல்பொருள் அங்காடி ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, நாளொன்றுக்கு ஒரு இலட்சம் முட்டைகளை சந்தைக்கு வெளியிடுவதற்கு வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles