இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி 5 இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்தநிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 14 மாதங்களுக்குப் பின்னர் மொஹமட் ஷமி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண தொடரின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொஹமட் ஷமி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அணியின் இணைத்துக்கொள்ளப்படாத நிலையில் சையத் முஷ்டாக் அலி கிண்ணத் தொடரிலும் விஜய் ஹசாரே தொடரிலும் பங்கேற்றார்.
இந்தநிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான இருபதுக்கு 20 தொடரில் மொஹமட் ஷமி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.