ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெர இன்று (11) மற்றும் நாளை (12) இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை வீதி உலா வர உள்ள நிலையில் இந்த விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதன் காரணமாக குறித்த காலப்பகுதியில் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.