NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று முதல் லொத்தர் சீட்டுகளின் விலைகள் அதிகரிப்பு – மெகா பரிசு தொகையும் அதிகரிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன இன்று (06) முதல் லொத்தர் சீட்டுகளின் விலையை அதிகரித்துள்ளது

அதன்படி 20 ரூபாவாக இருந்த லொத்தர் சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விலை உயர்வுக்கு ஏற்ப, நுகர்வோருக்கு வெற்றி வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

தேசிய லொத்தர் சபையின் சந்தைப்படுத்தல் உதவிப் பொது முகாமையாளர் மெனுர சதுரங்க இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு லொத்தர் சீட்டிலும் குறைந்தபட்ச பரிசு 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தத்தில், நடுத்தர அளவிலான பரிசுகள் மற்றும் முதல் மெகா பரிசுகளின் அளவு அதிகரித்து, அதிக வாடிக்கையாளர்களுக்குச் செல்வதால், அதிக வெற்றியாளர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம். 40 ரூபாய்க்கு 40 கோடி சூப்பர் பரிசாக உள்ளது. வாடிக்கையாளர் லொத்தர் சீட்டுகள் மூலம் செலுத்தப்படும் தொகையை ஒப்பிடுகையில் பரிசுத் தொகையும் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles