NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்றைய IPL தொடரில் CSK – RR பலப்பரீட்சை!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் 17ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளும் மோதுகின்றன.

தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி, அதன் பிறகு லக்னோவை 12 ரன் வித்தியாசத்திலும், மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. முந்தைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரஹானேவின் மின்னல்வேக அரைசதமும், ரவீந்திர ஜடேஜாவின் சுழல் பந்தும் வெற்றிக்கு உதவின.

தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் பாதியில் வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை. இதேபோல் பெருவிரலில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லை என்று சென்னை வீரர் ஜடேஜா நேற்று கூறினார். அதனால் ஆட்டத்தை ஸ்டோக்சும் தவற விடுகிறார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles