பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த மாதம் 5 ஆம் திகதி அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
எனவே, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அவர் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார்.
இதனையடுத்து அவரது உடல்நலம், சமூக மற்றும் அரசியல் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏ-வகுப்பு வசதிகள் கொண்ட சிறைக்கு மாற்றும்படி இம்ரான்கான் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இது குறித்த வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இந்தநிலையில் அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.