(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் இயங்கி வந்த ரோலர் கோஸ்டர் இயந்திரம் திடீரென நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த ரோலர் கோஸ்டர் இயந்திரம் தலைகீழாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த இயந்திரத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்க பாரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அவர்கள் மீட்கப்படும் சுமார் ஒரு மணித்தாயலம் வரை நேரம் தலைகீழாக இருக்க வேண்டியிருந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.