NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இராணுவத்திற்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு !

ஜப்பான் தனது அண்டை நாடான வடகொரியாஇ சீனாவின் நடவடிக்கைகளால் அவ்வப்போது பதற்றத்தை எதிர்க்கொண்டு வருகின்றது.

தற்போது உள்ள இராணுவத்தின் திறனை கொண்டு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம்இ உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள முடியாது என ஜப்பான் இராணுவ தலைமை தளபதி யோஷிகிடே யோஷிடா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் மற்ற நாடுகள் குறைத்து மதிப்பிடாமல் இருக்க நமது இராணுவ பலத்தை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். அடுத்தபடியாக அமெரிக்காவின் அணு ஆயுத யுக்தி உட்பட நமது தற்காப்பு திறன்களை உயர்த்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே வருகின்ற 2027 ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு துறைக்கு செலவிடும் தொகையை ரூ.15 இலட்சம் கோடியில் இருந்து சுமார் ரூ.24 இலட்சம் கோடியாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles