NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சதொச ஊடாக நிவாரண விலைக்கு விற்பனை செய்ய திட்டம்!

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் வாரத்தில் சதொச ஊடாக உரிய முட்டைகளை விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தையில் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை எனவும், முட்டையின் விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு நுகர்வோருக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாக விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நாளாந்தம் சுமார் ஒரு இலட்சம் முட்டைகள் சந்தைக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மேலும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles