இந்நாட்களில் அதிக உஷ்ணம் காரணமாக உடலில் ஏற்படும் அதிகப்படியான நீரிழப்பு காரணமாக, மருத்துவர்கள் இலகுவான ஆடைகளை அணிய அறிவுறுத்தியுள்ளனர்.
வெளிநாடுகளில் காணப்படும் அதே கலாசாரத்தை இலங்கையிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சை நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
அதன்படி, சூரிய ஒளியை உறிஞ்சும் வகையிலான ஆடைகளை அணிந்து வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று கூறிய அவர், நீர்ச்சத்து குறைபாட்டிற்கு தண்ணீர் மட்டுமின்றி இயற்கையான திரவ உணவுகளையும் அருந்துவது பொருத்தமானது என்றார்.