NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையர்கள் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

யாழ் – சுழிபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்றைய தினம் (27) அதிகாலை சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது கடலோர பாதுகாப்பு பிரிவினர் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காணப்படுவதால், தொடர்ந்து எம்மால் அங்கு வாழ முடியவில்லை என்பதால், தமிழகம் வந்துள்ளோம் எனவும், இதற்காக மன்னாரில் இருந்து தனுஷ்கோடி பகுதியில் எம்மை இறக்கி விட படகோட்டிக்கு ஒரு இலட்சத்து 50,000 பணம் வழங்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles