இலங்கையின் பழம்பெரும் சிங்கள பாடகர் ப்ரியா சூரியசேன தனது 80 ஆவது வயதில் காலமானார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
நுகேகொடை – கங்கொடவிலவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு நாளைய தினம் பூதவுடல் எடுத்து செல்லப்படவுள்ள நிலையில், நாளை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.