இலங்கையில் பயிரிடுவதற்காக ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என்ற இரண்டு புதிய மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த புதிய மாதுளை வகைகள், ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் சுட்டெண் மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட திசு வளர்ப்பு ஆய்வுகளை அடுத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு புதிய வகை மாதுளைகள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் பயிரிடுவதற்காக விவசாயிகளிடம் நேற்று(24) கையளிக்கப்பட்டுள்ளது.