NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது – கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர்..!

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது என கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டதாகவும், இனி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை எனவும் மீன்பிடி அமைச்சில் இருக்கின்ற அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதுடன், அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் அதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மனிதாபிமான உதவிகளை வாங்குவதோ கொடுப்பதோ தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தைக்கு தாங்கள் செல்லப்போவதில்லை எனவும் இதுதான் தங்களது மனிதாபிமான நடவடிக்கை என தாங்கள் கூறுகின்றோம் எனவும் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles