NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை போக்குவரத்து சபையின் இணையவழி ஆசனப் பதிவு செயலி போக்குவரத்து அமைச்சரால் அறிமுகம்

இலங்கை போக்குவரத்துச் சபையின் நீண்ட தூர பஸ்களுக்கான நேர அட்டவணையை பயணிகள் எளிதாகக் கண்டறியும் வகையிலும், ஆசனங்களை முன்பதி செய்யவும் தொலைபேசி மற்றும் இணைய அடிப்படையிலான செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த செயலியை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

அதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவைக்கான ஆசனங்களை 1315.டம என்ற கையடக்க தொலைபேசி செயலி மூலம் எவரும் முன்பதிவு செய்ய முடியும் என போக்குவரத்து, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவி;துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை நெடுந்தூர பயண சேவை அட்டவணையை இணையத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று அமைச்சர் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த செயலி மூலம் நீங்கள் விரும்பும் பஸ்ஸின் தொடக்கப் புள்ளி மற்றும் செல்ல வேண்டிய இடத்தைப் பதிவிட்டு ஆசனத்திற்கான முன்பதிவு செய்து பயணத்தின் நடுவில் அந்த பஸ்ஸின் சேவையைப் பெறலாம் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles