NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்த வாய்ப்பு!

லங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தலாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளன கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய ரூபாயை நியமித்த நாணயமாக்குவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தீர்வை மட்டுமன்றி, இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளும் இதனை வலியுறுத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles