NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை வரும் Elon Musk…!!!

X சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் (Elon Musk) இந்த வருட இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதை அடுத்து,  Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை ஆரம்பிப்பதற்கு வசதியாக புதிய விதிமுறைகளை இலங்கை உருவாக்கவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தோனிசியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்

.

அத்துடன், அவரை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles