NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை – ஸிம்பாப்வே; மூன்றாவது T 20 இன் இறுதிப் போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபத்திற்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இலங்கை மற்றும் ஸிம்பாப்வே அணிகள் முதல் இரண்டு போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் போட்டியின் வெற்றியை தீர்மானிப்பதாக அமைகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles