NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இவர் தான் தோனியின் மூத்த கிரிக்கெட் ரசிகர் – 103 வயது CSK இரசிகருக்கு தோனி தந்த பரிசு!

IPL கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தன்னுடைய கடைசி சீசனில் விளையாடி வருகிறார்.

தோனிக்கு ஆறிலிருந்து அறுபது வயது வரை ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள் என்று தெரியும்.

ஆனால் தோனிக்கு 103 வயதில் ஒரு ரசிகர் இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 103 வயது என்றால் அவர் சுமார் எத்தனை கிரிக்கெட் வீரர்களை பார்த்திருப்பார். டான் பிராட்மேன் தொடங்கி சச்சின் டெண்டுல்கர் வரை பல கிரிக்கெட் வீரர்களை பார்த்த ஒருவர் தற்போது தோனியின் ரசிகராக இருக்கிறார்.

சென்னையை சேர்ந்த இந்த 103 வயது ரசிகரின் பெயர் ராமதாஸ். இவருக்கு கிரிக்கெட் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். தன்னுடைய இந்த வயதிலும் கூட CSK வின் தீவிர ரசிகராக இருக்கிறார். மணி ஏழு முப்பது ஆனால் CSK விளையாடுகிறது என்று தெரிந்தால் டிவி முன் தன்னுடைய கண்ணாடியை போட்டுக்கொண்டு அமர்ந்து தோனி வருகைக்காக காத்துக் கொண்டு இருப்பாராம்.

60 ,70 வயதை தாண்டினாலே நடக்கவும் பார்க்கவும் கஷ்டப்பட்டு வரும் இந்த காலத்தில் 103 வயதில் தோனிக்கு ராமதாஸ் சப்போர்ட் செய்து வருகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ், தமக்கு 103 வயது ஆகிறது. நான் வயதானவர் கிடையாது. நான் ஒரு சீனியர் யூத் என்று காமெடியாக பதில் அளித்து இருக்கிறார்.

மேலும் கிரிக்கெட் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று கிரிக்கெட் பார்ப்பது மட்டும்தான் தன்னுடைய பொழுதுபோக்கு என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles