NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொள்ளாத ஹரின் மற்றும் மனுஷ!

பாராளுமன்றத்தில் நடந்து வரும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கடந்த இரண்டு நாட்களாக கலந்துக்கொள்ளவில்லை.

இவர்கள் முக்கியமான இந்த விவாதத்தில் கலந்துக்கொள்ளாதது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்த போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் விரிவாக விடயங்களை வெளியிட்டு வந்தனர்.

குறிப்பாக சோனிக்-சோனிக் என்ற வார்த்தையை ஹரின் பெர்னாண்டோவே பாராளுமன்றத்தில் வெளிக்கொண்டு வந்தார்.

இதனடிப்படையில் இன்று நடைபெறும் விவாதத்தில் இவர்கள் இருவரும் கலந்துக்கொள்வார்கள் என பலர் எதிர்பார்த்த போதிலும் அவர்கள் விவாதத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான செனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி முதல் இன்று வரை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

Share:

Related Articles