NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உகண்டா நாட்டில் டிங்கா டிங்கா எனும் புதிய வகை வைரஸ் பரவல்..!

உகண்டா நாட்டில் டிங்கா டிங்கா எனும் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வைரஸ் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிகளவில் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகண்டாவில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் டிங்கா டிங்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த டிங்கா டிங்கா வைரஸின் அறிகுறிகளாக அதிகப்படியான உடல் நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஆகியவை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இது உடல் இயக்கத்தையும் கடுமையாக பாதிக்கிறது எனவும்;, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உடல் பலவீனம் அடையும் சிலர் பக்கவாத உணர்வை கொண்டுள்ளதாகவும், அவர்களால் சிறிது தூரம் கூட நடக்க முடிவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை இந்த நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. எனவும் இதற்காக எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் ஒருவார காலத்துக்குள் குணமடைந்து விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து அறிவியல் விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் ஆய்வு நடாத்தி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles