NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உக்ரைனின் குடியிருப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் !

உக்ரைனின் குடியிருப்புகள் மீது ரஷ்யா ரொக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாகியுள்ளனர். 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில், பீரங்கிகள், சிறிய ரக பீரங்கிகள், குண்டுகள், ஆளில்லா விமானம் மற்றும் விமானம் உள்ளிட்டவற்றை கொண்டு 395 குண்டுகளை வீசியுள்ளனர் என உக்ரைனின் தென்பகுதிக்கான இராணுவ நிர்வாகத்தின் தலைவர் அலெக்சாண்டர் புரொகுடின் தெரிவித்துள்ளார்.

குறைந்த உயரத்தில் பறக்க கூடிய 4 ஏவுகணைகளை ரஷ்யா வீசின.

அவற்றை உக்ரைன் வான் பாதுகாப்பு படையினர் தாக்கி அழித்தனர் என அந்நாட்டு இராணுவம் நேற்று வெளியிட்ட டெலிகிராமில் தகவல் தெரிவிக்கின்றது.

Share:

Related Articles