NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது.

குறித்த பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்த நிலையில், அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles