NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயர்தர கல்விக்கு முன்னர் தொழில்சார் கற்கைநெறியை வழங்க தீர்மானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த மூன்று மாத காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்காக மாணவர்கள் காத்திருக்கும் 3 மாதக்காலப்பகுதியில் பாடசாலைக்குள் தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் உயர்தரம் படிக்காவிட்டாலும் அவர்களின் எதிர்கால தொழில் வாழ்க்கைக்கு ஓரளவு எழுத்தறிவு பெற முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வில் இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் டிப்ளோமாக்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Share:

Related Articles