NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக்கிண்ண தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிப்பு!

உலகக்கிண்ண தொடருக்கான 15 பேர்கொண்ட பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அணியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிரமப்பட்டு வந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தமீம் இக்பால் உலகக்கிண்ண அணியில் இடம்பெறவில்லை.

இது பங்களாதேஷ் அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.

மேலும் உபாதை காரணமாக ஆசிய கிண்ண தொடரில் விளையாடாத பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான எபாதத் ஹொசைன் உலகக்கிண்ண அணியிலும் இடம்பெறவில்லை.

அதற்கமைய ஷகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியில் முஷ்ஃபிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, தௌஹித் ஹிருதாய், மெஹதி ஹசன் மிராஸ், டஸ்கின் அஹமது, முஸ்தபிஸுர் ரஹ்மான், ஹசன் மஹ்முத், ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அஹமது, மெஹதி ஹாசன், தன்ஸித் ஹசன், தன்ஸிம் ஹசன் மற்றும் மஹ்மதுல்லா ஆகியோர் ஆகிய வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles