NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக் கிண்ண கால்பந்து – போட்டிக்கான அட்டவணை வெளியானது!

FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

அதன்படி அடுத்த உலகக் கிண்ணகால்பந்து தொடர் 2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது. 

இத்தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் நடத்துகின்றன. இந்த தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள நியூஜெர்சியில் இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற நியூஜெர்சி- டெக்சாஸ் இடையே கடும் போட்டி நிலவியதையடுத்து, இறுதியில் நியூஜெர்சி இறுதி போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. மெக்சிகோவில் ஜூன் 11ஆம் திகதி உலகக் கிண்ண தொடர் தொடங்கி, ஜூலை 19ஆம் திகதி நியூஜெர்சியில் முடிவடைகிறது.

மொத்தம் 16 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles