NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகின் தலைசிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக மாறிய இலங்கை!

சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

சுற்றுலா இணையத்தளமான Big Seven Travel இணையத்தளம் இதனை குறிப்பிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வாய்ப்புகளை கருத்திற்கொண்டு இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டில் பார்வையிட வேண்டிய உலகின் சிறந்த 50 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கை 13வது இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஸ்பெயின், மலேசியா, மாலைதீவு, பாலி, இந்தோனேஷியா, சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மேலாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா பயணிகளுக்கு நட்புரீதியான விருந்தோம்பல் மற்றும் சுவையான உணவு மற்றும் பானங்கள் மற்றும் கடற்கரையின் அழகு மற்றும் பழங்கால இடிபாடுகளை பார்வையிடும் திறனை இலங்கை வழங்குகிறது என்று அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles