(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
உலகில் அதிக அளவில் பால்மாவை நுகரும் நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயத்தை கால்நடைவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் பாராளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.
உலகில் அதிக அளவில் பால்மாவை நுகரும் ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒன்று என குறிப்பிட்ட அவர், திரவ பாலின் நுகர்வுடன் ஒப்பிடும்போது பால்மா நுகர்வானது ஆரோக்கியத்திற்கும் போசாக்கிற்குக்கும் பொருத்தமானது அல்ல. திரவ பால் நுகர்வினை பிரச்சாரம் செய்வது சவால் மிக்கது. இலங்கையில் 337 கால்நடை வள காரியாலயங்கள் காணப்படுவதாகவும் அவற்றைக் கொண்டு திரவ பால் நுகர்வினை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.