நாட்டில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்தான பிஸ்கட் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சு செய்துள்ளது.
அதற்கு தனியார் பிஸ்கட் நிறுவனமும் சம்மதம் தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மற்றும் பிஸ்கட் நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.