NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஊழல் மற்றும் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு..!

ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ்  (Eric Walsh)தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது தொடர்பில் கனடா அரசாங்கத்தின் அனுபவங்களை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம் என சுட்டிக்காட்டிய கனடிய உயர்ஸ்தானிகர், தற்போதைய அரசாங்கம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இலங்கைக்கான கனடிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் (அரசியல்) பெட்ரிக் பிகரிங் (Patrick Pickering) அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles