NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எதிர்க்கட்சியிலிருந்து சுயாதீன தெரிவுக்குழுவை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் யோசனை…!

நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களை இனங்காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய தெரிவுக்குழு செயற்திறன் மிக்கதாகக் காணப்படாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

எனவே, தனது தலைமையில் பொருளாதார சீரழிவுக்கான காரணங்களை கண்டறிய எதிர்க்கட்சியின் தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிக்க முடியும் என அவர் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டம் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற போதே எதிர்க்கட்சி தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார வங்குரோத்துக்கான காரணங்களை கண்டறியும் அரசாங்கத்தின் தெரிவுக்குழுவிற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles