எதிர்வரும் ஆண்டு தொடக்கத்தில் அவசர ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை உறுப்பினர்கள், அரசாங்கக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்காகவும் அது முழுமையான தேர்தல் தயார்படுத்தல் என்பன பற்றி அந்த கலந்துரையாடல் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.