தனக்குச் சினிமாவில் விஜயை மிகவும் பிடிக்கும் எனவும், தன்னுடைய அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் போது, அரசியலுக்கு அப்பால் கேட்கப்பட்ட வினாக்களுக்குப் பதிலளிக்கும்போதே நாமல் ராஜபக்ஷ எம்.பி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில். எனக்கு கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை எப்போதும் பிடிக்கும், யுவராஜையும் பிடிக்கும். இப்போது ரோகித் ஷர்மா, கோலி, பும்ரா ஆகியோரைப் பிடிக்கும். அதேபோல் சினிமாவில் விஜயை மிகவும் பிடிக்கும். ஆனால், என்னுடைய அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும் என்றார்.