ஐக்கிய ஜனநாயக குரல் சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேற்று பதுளை மாவட்ட செயலகத்தில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
நேற்று முன்தினம் முன்னளாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சியாக ஐக்கிய ஜனநாயக குரல் என்ற கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இக்கட்சியின் ஒலிவாங்கி சின்னம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.