NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐரோப்பிய கிளப் வரலாற்றில் முத்திரை பதித்த ஈழத் தமிழர் !

நோர்வேயின் முக்கியமான கால்பந்தாட்ட கிளப்களில் ஒன்று FK Haugesund. இதன் முதன்மை பயிற்சியாளராக சஞ்சீவ் (சண்) மனோகரன் என்ற இலங்கைத் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் இதே கிளப்பின் வளர்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த அவர், தற்போது தற்காலிக முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

டென்மார்க்கில் பிறந்து வளர்ந்த சஞ்சீவ் மனோகரன். இந்த கிளப்பில் இணையும் முன் பத்தாண்டுகளுக்கு மேலாக டென்மார்க்கின் சூப்பர் லிகா தொடரில் இடம் பெற்று விளையாடும் ஏசிஎஃப் கிளப்பின் 10 வயது முதல் 19 வயது வரையிலான ஜூனியர் அணிகளுக்கான பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.

ஐரோப்பாவின் UEFA தேர்வில் தேர்ச்சி பெற்று இவர் உதைபந்தாட்ட பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவின் மகள்வழி பேரன் ஆவார்.

ஐரோப்பிய நாடுகளின் முதல்தர கால்பந்து கிளப் அணிகளில் பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்ற முதல் இலங்கைத் தமிழர் சஞ்சீவ் (சண்) மனோகரன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles