பதினான்கு மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஐஸ்லாந்து அவசரநிலையை அறிவித்துள்ளது.
ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியிலுள்ள கிரிண்டவிக் ஊர்வாசிகளை ஊரைவிட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ரெய்க்யவிக்கிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் இருமுறை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐஸ்லாந்தின் தென்மேற்கு வட்டாரத்தில் கடந்த அக்டோபர் முதல் 24,000 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அம்மையம் குறிப்பிட்டுள்ளது.
நிலத்திற்கு அடியில் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் எரிமலைக் குழம்பு ஒன்றுதிரண்டு வருகிறது என்றும் அது மேல்நோக்கிக் கிளம்பினால் எரிமலை வெடிக்கக்கூடும் என்றும் மையம் கூறியுள்ளது.