எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு நேற்று (9) ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்தவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது.
ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு ஒன்று கூடியதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன மற்றும் ஜனாதிபதி வஜிர அபேவர்தன உட்பட்ட ஐ.தே.க முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
தேர்தலில் அரசியல் கூட்டணி அமைப்பது உட்பட தேர்தல் விடயங்களை கையாளும் பொறுப்பு முன்னாள் எம்.பி ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.