நாட்டின் ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு சீனாவின் உயர்மட்ட சட்டமன்ற குழு அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஓய்வுபெறும் வயது தற்போது உலகளவில் மிகக் குறைந்த அளவில் உள்ளது.
சீனாவில் 1960 இல் சுமார் 44 வருடங்களாக இருந்த ஆயுட்காலம் 2021 இல் 78 ஆக உயர்ந்துள்ள நிலையில் 2050 இல் 80 வருடங்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆண்களின் ஓய்வு வயது 60லிருந்து 63 ஆகவும், ஒயிட் காலர் வேலை செய்யும் பெண்களுக்கு 55லிருந்து 58 ஆகவும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய சட்டம் அமலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.