கஜகஸ்தான் நாட்டின் அபை மாகாணத்தில் உள்ள பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இக் காட்டுத்தீயால் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதுடன்,வனப்பகுதியில் தீ வேகமாக பரவி வரும் நிலையில் தீயை அணைக்க தீயணைப்பு, இராணுவம், பேரிடர் மீட்புக்குழுவினர் என பலர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கி 14 உயிரிழந்துள்ளதுடன், பலரும் படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
https://www.maalaimalar.com/news/world/14-people-were-killed-in-the-forest-fire-in-kazakhstan-620818?infinitescroll=1