NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் முட்டையை பெற்றுக்கொள்ளலாம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட வெள்ளை மற்றும் சிவப்பு நிற முட்டைகளை குறைந்த விலைக்கு வாங்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஆர்.எம் சரத் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

வெள்ளை முட்டை 40 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை ஒன்று 41 ரூபாவாகவும் மொத்த விலைக்கு பண்ணையிலிருந்து வியாபாரிகளுக்கு விநியோகிப்பதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, பொருளாதார நிலையங்கள் மற்றும் சில கடைகளில் இருந்து 44 மற்றும் 45 ரூபா விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles