இந்தியா – உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய அவரது மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பிறகு அவரை கட்டிப்போட்டு அவரது ஆண் உறுப்பை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார்.
மனைவி தன்னை கட்டி வைத்து தாக்குவது சிகரெட்டால் சுடுவது போன்ற காட்சிகளை சிசிடிவி காட்சிகள் மூலம் கணவன் பதிவு செய்துள்ளார். இதனை ஆதாரமாக கொண்டு கடந்த ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு அளித்துள்ளார்.