NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்டி பிரதான வீதியூடான வாகன போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கான அறிவித்தல்..!

கண்டி பிரதான வீதியூடான வாகன போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளை இன்று இரவு 8.30 முதல் நள்ளிரவு 12 மணி வரையான காலப்பகுதியில் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

நிட்டம்புவ ஸ்ரீவிஜேராம விகாரையின் வருடாந்த பெரஹெர ஊர்வலம் நடைபெறவுள்ளதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நிட்டம்புவ அத்தனகல்ல வீதி களுவாகஸ்வில ஸ்ரீவிஜேராம விகாரையில் ஆரம்பமாகும் பெரஹெர, நிட்டம்புவ நகரை அடைந்து இடதுபுறமாக திரும்பி கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கொழும்பு திசை நோக்கி பயணித்து வல்வத்த சந்தியில் வலதுபக்கமாக வித்யாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீபோதி விகாரையை சென்றடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரஹெராவில் கலந்துகொள்வதற்காக பெருமளவானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனவும், இதனால், நிட்டம்புவ நகரம் முதல் மல்வத்த சந்தி வரை கொழும்பு மற்றும் கண்டி நோக்கி பயணிக்கும் திசையில் ஒருவழிப் போக்குவரத்தாக மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Related Articles