NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்த நியூயோர்க் நகரம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக நியூயோர்க் நகரம் முழுக்க புகை மூட்டத்தால் மஞ்சள் நிறமாக மாறிய புகைப்படம் வைரலாகியுள்ளது.

காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் கனடாவில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மஞ்சள் நிற புகைமூட்டம் மேன்ஹேட்டன் நகரின் வானுயர்ந்த கட்டங்களை மூழ்கடிக்க செய்திருக்கிறது. இதன் காரணமாக காற்று மாசு ஏற்பட்டதோடு, விமானங்கள் காலதாமதமாக கிளம்பி சென்றன. மேலும் காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இருந்து சிகாகோவின் மேற்கு பகுதி மற்றும் தெற்கு அட்லாண்டா வரை பாதிப்பை ஏற்பட்டுள்ளது.

கனடாவில் இந்த காட்டுத்தீ காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயில் சுமார் 3.8 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு முழுக்க தீயில் கருகின.

கனடா வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீ இது என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles