NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனடாவில் விமான விபத்தில் சிக்கி 6 பேர் பலி!

கனடாவின் வடமேற்கில் உள்ள போர்ட் ஸ்மித் நகரில் இருந்து வடக்கு பகுதியிலுள்ள சுரங்கத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சிறிய பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்புக்குழுவினர் தேடலின் போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

இவ்விமான விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன்இ ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்த விசாரணைகளை முன்னெடுக்க கனடா போக்குவரத்து பாதுகாப்பு சபை ஒரு குழுவை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles